டில்லி,

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை குறித்து தற்போது சர்ச்சைகள் கிளம்பி உள்ளது.

இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாக கூறினார்.

மேலும், ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் பற்றி முறையாக தகவல் வெளியிடப்படும் என்றும்,  ‘ஜெயலலிதாவுக்கு எங்களால் இயன்ற வரை 100% சிறப்பான உயர்தர சிகிச்சை அளித்தோம் என்றார்.

மேலும் அப்பல்லோவில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் சந்தித்தார்களா என்ற கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அவருடன் கலந்து கொண்ட மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஹரிப்ரசாத், ஜெயலலிதபா ‘சிகிச்சை தொடர்பாக நடக்கும் எந்த விதமான விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில்  வழக்கப்பட்ட சிகிச்சை குறித்து வித விதமான தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த ஆண்டு கூறிய தகவல்கள் அனைத்தும் பொய் என்று தற்போது அமைச்சர்களே கூறி வருகிறார்கள். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைக்கயில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட வேண்டுமென்று அதிமுக  தொண்டர்கள் கோரி வருகின்றனர்.