ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 4ம் கட்ட தேர்தலில் 50.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 4ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. அதில், 50.08 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

மாநில தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, முதல் கட்ட தேர்தலில் 51.46 சதவீதமும், 2ம் கட்டத்தில் 48.62 சதவீதமும் வாக்குகளும் பதிவாகி இருக்கின்றன.

3ம் கட்டத்தில் 50.53 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. டிசம்பர் 19ம் தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிந்த பின்னர், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22ம் தேதி நடைபெறும்.