அதானியும் அம்பானியும் காங்கிரஸ் கட்சிக்கு பணம் கொடுப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார் இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பணம் கொடுத்தது உங்களுக்கு தெரியுமென்றால் சிபிஐ மற்றும் EDயை வைத்து விசாரிக்காதது ஏன் ? என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது, ​​மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி, அதானி குறித்து பேசுவதை காங்கிரஸ் கட்சி நிறுத்திவிட்டது.

தேர்தலுக்காக டெம்போக்களில் அந்த தொழிலதிபர்களிடம் இருந்து மூட்டை மூட்டையாக கருப்பு பணத்தை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி :

“என்ன பதட்டத்துல இருக்கீங்களா?

பூட்ன ரூம்க்குள்ளதான் அதானி அம்பானி பேரலாம் சொல்லுவீங்க? இப்ப வெட்டவெளில அதானி அம்பானி ன்னு பேச ஆரம்பிச்சிட்டீங்க.

டெம்போல காசு வர்றதா பேசுறீங்க, என்ன personal experience ல பேசுறீங்களா? உடனே ED CBI ய ஏவி விசாரணை நடத்த சொல்லுங்களேன் முடிஞ்சா?

மக்களே நான் மறுபடி சொல்றேன், கடன் தள்ளுபடியா மோடி இந்த தொழிலதிபர்களுக்கு எவ்ளோ காசுசேர்த்து குடுத்திருக்காரோ அதே அளவு நாட்டு மக்களுக்கு நாங்க குடுக்க போறோம்.

மகாலக்ஷ்மி திட்டம், முதல் வேலை உத்தரவாதம் திட்டம் இதெல்லாம் அமல்படுத்தி நாட்ல கோடான கோடி லட்சாதிபதிகள உருவாக்க போறோம். இவங்க 25 கோடீஸவரர்கள உருவாக்குனாங்க, நாங்க கோடானகோடி லட்சாதிபதிகள உருவாக்குவோம்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.