பச்சை குத்திக் கொண்டால் வேலை கிடையாதா ? : மும்பை உச்சநீதிமன்றம் கேள்வி

Must read

மும்பை

த்திய புலனாய்வுப் பாதுகாப்பு படைக்கு பச்சை குத்திக் கொண்டவர்களுக்கு வேலை அளிக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க மும்பை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய புலனாய்வுப் பாதுகாப்புப் படை  ஓட்டுனர்கள் தேவை என ஒரு விளம்பரம் அளித்திருந்தது.   அதற்கு பலரும் விண்ணப்பித்திருந்தனர்.  அதில் ஸ்ரீதர் பகாரே என்பவரும் ஒருவர்.  இவர் அனைத்து போட்டிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.  பிறகு மருத்துவ பரிசோதனையில் அவர் நிராகரிக்கப் பட்டுள்ளார்.  அதற்கு அவர் வலது கையில் பச்சை குத்தப் பட்டிருந்ததே காரணம் என தெரிவிக்கப்ப்பட்டது.

அதை எதிர்த்து ஸ்ரீகாந்த் மத்திய புலனாய்வுப் படை தேர்வு அதிகாரிகளிடம் முறையீடு செய்தார்.  அந்த முறையீடு விசாரணைக்கு வரும் முன்பே அவர் மும்பை அப்போலோ மருத்துவமனையை அணுகி தாம் பச்சை குத்தியிருந்தை அழிக்குமாறு கேட்டுக் கொண்டுளார்.  மருத்துவர்கள் அந்த ஓம் என  பச்சை குத்தியிருந்ததை 90% நீக்கி விட்டனர்.  அதற்கான சான்றிதழும் கொடுத்துள்ளனர்.   ஆனால் அதை தேர்வுக் குழுவினர் ஒப்புக் கொள்ளவில்லை.  அதனால் அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஸ்ரீகாந்த் பகாரேவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிடுகையில் பச்சை குத்தி இருந்தது அழிக்கப்பட்டு விட்டதாகவும் சில நாட்களில் முழுவதுமாக மறைந்து விடும் என்பதால் அவருக்கு பணி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.   மேலும் ஓட்டுனர் தேவை என நிர்வாகம் கொடுத்ஹ்ட விளம்பரத்தில் பச்சை குத்தி உள்ளவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என குறிப்பிடவில்லை எனவும் கூறினார்.   பச்சை குத்தி இருந்தால் பணி அளிக்கக் கூடாது என விதிகள் உண்டா என இரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய புலனாய்வு பாதுகாப்பு படை தலைமை அதிகாரியிடம் மும்பை உயர்நீதி மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

More articles

Latest article