தொப்பை உள்ள போலிசா? நோ விருது  : அரசு அறிவிப்பு..

Must read

டில்லி

டலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ளும் போலிசாருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்கப் படும் என அரசு அறிவித்துள்ளது.

போலீஸ் என்றாலே தொப்பையுடன் காணப்படுபவர்கள் என்பது மக்கள் பலரின் கருத்து.   பல திரைப்படங்களிலும் ஊடகங்களிலும், தொப்பை உள்ள போலீசை கிண்டல் செய்வது போல ஜோக்குகள் வந்து கொண்டு இருக்கின்றன.   இதை கட்டுப்படுத்த,   ஜோக்கை அல்ல,  போலீசாரின் தொப்பைய கட்டுப்படுத்த சமீபத்தில்  மத்தியஅரசின் உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை போலீஸ் துறைக்கும் மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது.

அதில் கூறப்படுவதாவது :

”போலீஸ் காவலர்களுக்கு ஜனாதிபதி விருது அளிப்பது குறித்து சில வரைமுறைகள் வகுப்பட்டுள்ளன.   போலீஸ் என்றாலே ஒரு மிடுக்கு, மற்றும் சுத்தமான ஒரு வடிவமைப்பு அவசியமாகும்.   அதன்படி விருது வழங்கும் போலீசார் மருத்துவ மற்றும் உடல் தகுதி சான்றிதழ் வழங்க வேண்டும்.   அது மட்டும் இன்றி பல புகார்கள் உள்ள போலீசார் இனி இந்த விருதுக்கு பரிந்துரைக்கப் பட மாட்டார்கள்.

அனைவரும் உடலமைப்பில் நம்பர் 1 ஆக காணப்படுவது மிக அவசியம்.   அதாவது உடற் பயிற்சி செய்து ஊளை சதைகளை குறைத்து காணப்பட வேண்டும்.   அவர்களுக்கு கண் பார்வை சரியாக உள்ளதாகவும் சான்றிதழ் தர வேண்டும்.   மிகவும் இன்றியமையாத நேரங்களில் மட்டுமே இது தளர்த்தப்படும்.

இந்த விதிமுறைகள் சரியான போலீசுக்கு விருதுகள் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப் பட்டுள்ளது.   அதே நேரத்தில் ஒரு போலீஸ் அதிகாரி மூன்று முறை மட்டுமே இனி விருதுக்கு பரிந்துரை செய்யப்படுவார்.   மூன்று முறையும் விருதுகள் வழங்கப்பட்டாலும், அல்லது ஒரு முறை கூட வழங்கப்படாவிடினும், அவர் மீண்டும் பரிந்துரைக்கப்பட மாட்டார்.   இந்த விதிமுறைகள் வரும் 2018 குடியரசு தின விருதுகளில் இருந்து பின்பற்றப் படும்.  அத்துடன் இந்த விருதுகள் வழங்க குறைந்தது 18 வருடங்கள் பணி புரிந்திருக்க வேண்டும்.   விசேஷ விருதுகளாக இருப்பின் குறைந்து 25 வருடங்கள் பணி புரிந்திருக்க வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article