சென்னை: துறைமுகம் – மதுரவாயல் இடையேயான மேம்பாலப் பணிகள் 2027 நவம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என்று சென்னை துறைமுகத்தின் தலைவர் எஸ்.விஸ்வநாதன், காமராஜர் துறைமுகத்தின் தலைவர் ஜெ.பி.ஐரின் சிந்தியா தெரிவித்தனர்.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் வர்த்தகப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.6 கி.மீ நீள ஈரடுக்கு உயர்மட்டச் சாலைப் பணிகள், சுமார் 3,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சம் இதன் ஈரடுக்கு வடி வமைப்பாகும். இதில் மேல் அடுக்கு பிரத்யேகமாக சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கனரகக் கண்டெய்னர் லாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லாரிகள் நகரின் பொதுப் போக்கு வரத்திற்கு இடையூறு இல்லாமல் தடையின்றி பயணிக்க முடியும். அதே வேளையில் கீழ் அடுக்கு உள்ளூர் வாகனப் போக்குவரத்திற்காக வடி வமைக்கப்பட்டுள்ளது.
நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாக னங்கள் ஏறி இறங்கும் வசதிக்காக 13 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்குதளங்கள் அமைக்கப்படு கின்றன.
தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலில் மதுரவாயலில் இருந்து துறைமுகத்தை அடைய சுமார் 2 மணி நேரம் வரை ஆகிறது. ஆனால் இந்த உயர்மட்டச் சாலை பயன்பாட்டிற்கு வரும்போது இப்பயணம் வெறும் 25 முதல் 30 நிமிடங்களாகக் குறையும்.
நாளொன்றுக்குச் சுமார் 20,000 உள்ளூர் கார்கள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளதால் கோயம் பேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் உள்கட்டமைப்பில் ஒரு மிகமுக்கிய மைல்கல்லாக அமையவுள்ளது.
இந்தச் சாலைத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, சென்னை துறைமுகத்தின் செயல்பாட்டுத் திறனைப் பல மடங்கு உயர்த்தும். 2047-ஆம் ஆண்டிற்குள் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை 200 மில்லியன் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விரைவுச் சாலை அதற்கான முதுகெலும்பாக அமையும்.
இந்த மேம்பால சாலை திட்டம் கடந்த கால அதிமுக, திமுக ஆட்சியாளர்கள் மற்றும் வழக்குகள் பணிகள் காரணமாக தாமதமாகி வந்தது. கடந்த திமுக ஆட்சியில், இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக தற்போது புதிய வேகமெடுத்துள்ளன. கட்டுமானப் பணிகளைப் பொறுத்த வரை ஆற்றின் குறுக்கே மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் இந்தப் பாலம் அமைக்கப்படுவதால் சில இடங்களில் நவீன ‘கேபிள் ஸ்டேடு’ தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.
தற்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் கூவம் ஆற்றின் கரையோரங்களில் தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இரவு நேரங்களில் கூடுதல் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை 2027-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்ந நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய துறைமுகம் தலைவர்கள், கடந்த நிதியாண்டில், இரு துறைமுகங்களும் இணைந்து மொத்தமாக 107 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனையை படைத்துள்ளன. இதில் சென்னை துறைமுகம் 57.9 மில்லியன் டன் சரக்குகளையும், காமராஜர் துறைமுகம் 49.08 மில்லியன் டன் சரக்குகளையும் கையாண்டுள்ளன. இரு துறைமுகங்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் ரூ.2,400 கோடியை கடந்துள்ளது. இரு துறைமுகங்களின் மூலதன செலவினமும் ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதில் சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் ரூ.1,185 கோடி செயல்பாட்டு வருவாயை ஈட்டியுள்ளதுடன், துறைமுக வரலாற்றிலேயே மிக அதிபட்சமாக ரூ.434.29 கோடி நிகர உபரி வருவாயை பதிவு செய்துள்ளது.
காமராஜர் துறைமுகம் கடந்த நிதியாண்டில் ரூ.1,239 கோடி செயல்பாட்டு வருவாயை ஈட்டியதுடன், நாட்டின் முன்னணி துறைமுகங்களிலேயே மிகக் குறைந்த இயக்க சதவீதமாக 25.48 சதவீதத்தை பதிவு செய்திருக்கிறது.
இதேபோல் துறைமுகத்தின் வட்டி, வரி மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய வருவாய் (எபிட்டா) வரலாற்றிலேயே முதன்முறையாக ஆயிரம் கோடி ரூபாயை கடந்து ரூ.1,071.63 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்னை துறைமுகத்துக்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்களுக்காக பிரத்யேகமாக துறைமுகம் – மதுரவாயல் இடையே அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் 2027 நவம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
காமராஜர் துறைமுகத்தில் பெரிய கப்பல்களைக் கையாளுவதற்கு ஏதுவாக ரூ.440 கோடி மதிப்பில் 6-வது கட்ட ஆழ்கடல் தூர்வாரும் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இதனால் 2.44 லட்சம் டன் சரக்கு கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய கப்பல்களையும் தற்போது கையாள முடிகிறது. இதற்கிடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள சென்னை துறைமுகத்தின் ‘அவுட்டர் ஹார்பர் ப்ராஜெக்ட்’ தொடர்பாக ‘ரைட்ஸ்’ நிறுவனம் போக்குவரத்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
செங்கடல் பகுதியில் நிலவும் சர்வதேச பதற்றங்கள் மற்றும் ஈரான்-அமெரிக்கா இடையேயான பிரச்சினைகள் காரணமாகக் கச்சா எண்ணெய் இறக்குமதியில் தொடக்கத்தில் சில சவால்கள் இருந்தாலும், தற்போது மாற்று வழிகள் மூலம் அவை சீரமைக்கப்பட்டுவிட்டன.
எனினும் இங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் வாகனங்கள் ஏற்றுமதியில் 6 முதல் 7 லட்சம் டன் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள ஏற்றுமதியாளர்களுக்குக் கூடுதல் சேமிப்புக் கிடங்கு வசதிகள் மற்றும் கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]