சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ்  தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே முன்னாள் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல்களை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ள நிலையில், அடுத்ததாக  திமுக  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை  அனுப்பியுள்ள கடிதத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஏற்கனவே நிலுவையில் உள்ள வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு (Disproportionate Assets Case) மற்றும் அதனுடன் தொடர்புடைய பணமோசடி விவகாரத்தில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் பெருமளவில் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்த அனுமதி கோரி உள்ளது. பணமோசடி வழக்கு ஒன்றில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டி உள்ளது. இந்தச் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அவரிடம் முழுமையான மற்றும் விரிவான விசாரணையை மேற்கொள்ளத் தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் மத்திய முகமை கோரியுள்ளது.

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மனு

[youtube-feed feed=1]