சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி, இதுவரை இல்லாத அளவுக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனையாகி உள்ளதுரு. ரூ. ரூ.850 கோடிக்கு மது விற்பனை ஆகி, தமிழ்நாடு குடிகார மாநிலமாகவும், போதை மாநிலமாகவும் மாறி வருவதை உறுதி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே பள்ளி மாணவ மாணவிகள் முதல் முதியோர்கள், பெண்கள் என பல தரப்பினரும், சமத்துவ வேறுபாடின்றி, போதைக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வரும் நிலையில், அரசும் வருமானத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு மது விற்பனை செய்து, அதுவும் இலக்கு வைத்து விற்பனை செய்து, மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிப்பதுடன், அவர்களை மதுமயக்கத்திற்கு பழக்கி வருகிறது.
பெரும்பாலும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பது ஆண்கள். ஆனால் பெரிய அளவில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் குடித்தே தீர்ப்பது. அல்லது வேலைக்குப் போகாமல் குடிக்க பணம் கேட்டு மனைவியை துன்புறுத்துவது… குடும்ப பாரம் முழுவதையும் சுமப்பதோடு, குடிகாரன் மனைவி என்ற அவப்பெயரையும் சேர்த்தே சுமக்க வேண்டிய அவல நிலை பெண்களுக்கு ஏற்பட்டு வருகிறது. மேலும் சமீப காலங்களில் வீடுகளில் வைத்தே ஆண்கள் குடிப்பதை தொடரும் நிலையில், அதை காணும் பெண்களும், அவர்களின் குழந்தைகளும் மது பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் நேரடியாகவே டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது வாங்கி அருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த மதுபழக்கம் காரணமாக, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் அதிகரித்து வருவதுடன், பாலியல் சம்பவங்கள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, மது விற்பனை 2025ம் ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடைபெற்றது. அதாவது நடப்பாண்டு இதுவரை இல்லாத அளவுக்கு உச்சபட்ச விற்பனையாக ரூ.850 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது.
போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய 2 நாளுக்கான விற்பனை மட்டும் ரூ.519 கோடியாக உயர்ந்தது. 16-ந்தேதி மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் 15-ந் தேதியே அதிக அளவு மதுபானங்கள் வாங்கி குவித்தனர். இதுவரையில் இல்லாத விற்பனையாக இது பார்க்கப்படுகிறது. காணும் பொங்கலான 17-ந்தேதி மதுவிற்பனை படுஜோராக நடந்துள்ளது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, விழுப்புரம் மண்டலங்களின் மதுபானங்கள் தேவையான அளவு குவிக்கப்பட்டு இருந்தது. நகரப் பகுதிகளை காட்டிலும் கிராமப்புறங்களில் மது விற்பனை கணிசமாக கூடி இருந்தது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து, பொதுமக்களை குடிகாரர்களாக்கி வருகிறரு. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக மதுபானம் இடம் பெற்று வரும் அளவுக்கு தமிழ்நாட்டில் மது விற்பனையும், மதுப்பிரியர்களும் அதிகரித்து உள்ளனர். இது இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்கான முட்டுக்கடையாக கருதப்படுகிறது.
திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு! அன்புமணி
குடிகார மாநிலமாக மாறி வரும் தமிழ்நாடு: தீபாவளி மதுவிற்பனை எவ்வளவு தெரியுமா?
போதை பொருள் விற்பனை செய்வது தொடர்பாக கல்லூரி மாணவர்களிடையே வெட்டு குத்து! இது சென்னை சம்பவம்…
பள்ளிகளில் பாலியல் தொல்லை அதிகரிப்பு: விழிப்புணர்வு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை….
பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் புகார்! அரசு அதிரடி நடவடிக்கை…
[youtube-feed feed=1]போதை பொருள் விற்பனை அமோகம்: சென்னையில் கடந்த 3 நாட்களில் கஞ்சா விற்ற 334 பேர் கைது!