நெட்டிசன்:

ன்னார்குடி மாஃபியாவை தடுக்கவே ஸ்டாலின் அரும்பாடுபடுகிறார் என்கிறார்கள். சரி இருக்கட்டும். திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் உத்தம சீலர்களா? மனதை தொட்டு பதில் சொல்லட்டுமே. கலாநிதி, தயாநிதி, கேஎன் நேரு, பொன்முடி, எ.வ.வேலு, சேகர்பாபு, ஜெகத்ரட்சகன் போன்றவர்கள் எல்லாம் உழைத்து சேர்த்த சொத்துகள்தானா அவர்களிடம் இருப்பது?

கட்டப்பஞ்சாயத்து  என்றால் என்னவென்றே இவர்களுக்கு தெரியாதா? மன்னார்குடி குடும்பம் என்கிறீர்களே? ஸ்டாலின் மகன் உதயநிதி நடித்த படங்களுக்கு பேனர் வைத்த திமுக பொறுப்பாளர்கள் எத்தனை பேர் உண்டு?

அதுவும் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செல்லும் ஊரில் எல்லாம் அவரின் பார்வையில் படும்படி உதயநிதி பேனர்கள் வைப்பது இந்த திமுக கோஷ்டியின் வாடிக்கை தானே. மருமகன் சபரீசன் தான் இப்போது திமுக செல்லும் பாதையை தீர்மானித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அந்த கட்சியின் பொறுப்பாளர்கள் மனமறிந்து மறுக்க முடியுமா?

ஓபிஎஸ்க்கும் பழனிச்சாமிக்கும் இடையிலான பிரச்சினையை தன்னுடைய பிரச்சினையாக வரிந்துகட்டிக் கொண்டு ஸ்டாலின் செய்த நடவடிக்கைகள் அவரின் முதிர்ச்சியின்மையை காட்டவில்லையா? எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற வெறியின் வெளிப்பாடு தானே அது? வெறி உச்சத்துக்கு போனதால் தானே திமுகவினர் மைக், நாற்காலிகளை எல்லாம் உடைத்தார்கள்!

எம்எல்ஏக்களை ரிசார்டில் அடைத்து வைத்திருந்ததால் ஜனநாயகம் கெட்டுவிட்டது என்று மக்கள் மத்தியில் நிலவும் கருத்தை தன்னுடைய அரசியல் மூலதனமாக்கிக் கொள்ள ஸ்டாலின் முனைந்திருக்கிறார் என்பதன் அறிகுறிதானே சட்டசபை அடாவடி எல்லாம்? மாஃபியாவுக்கு எதிராகத்தான் ஸ்டாலின் இவ்வளவையும் செய்கிறார் என்றால் அதை முதலில் தன்னுடைய கட்சியில் இருந்து ஸ்டாலின் தொடங்கலாமே?

ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக மாவட்ட செயலாளர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் எவ்வளவு என்று முதலில் ஒரு கணக்கு எடுங்கள். அவர்களின் அப்பா காலத்தில் அவர்களுக்கு இருந்த சொத்து எவ்வளவு என்று ஒப்பிட்டுப் பார்த்து மக்களுக்கு சொல்ல ஸ்டாலினுக்கு தெம்பு இருக்கிறதா?

ஊர் மக்களிடம் திமுக பெரும்புள்ளிகள் அடித்துப்பிடுங்கிய சொத்துகள் எவ்வளவு தெரியுமா? அவர்கள் நடத்தும் தொழில்கள், முதலீடுகள் எல்லாம் கணக்கெத்துப் பாருங்கள். மன்னார்குடியை விஞ்சி நிற்கும். ஒட்டுமொத்த தமிழ் திரைப்படத்துறையை, கேபிள் தொழிலை எல்லாம் திமுக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் பணம் குவித்தது மக்களுக்கு தெரியாதா?

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று நியாயம் கேட்கும் ஸ்டாலின், தா.கிருட்டிணன் உள்ளிட்ட சிலரது மரணத்துக்கு நியாயம் கேட்கத் தயாரா? மக்கள் மறந்துவிட்டார்கள் என்ற நினைப்பில் அரசியல் கூத்தாடுவது உங்களை உத்தமராக்கிவிடுமா? திராவிடர் இயக்கத்தால் பதவி, பணம் சம்பாதித்த திமுக மாவட்டச் செயலாளர்களான குறுநில மன்னர்கள் என்றைக்காவது அந்த திராவிடர் இயக்கத்துக்கு உறுதுணையாக இருந்ததுண்டா?

கலைஞர் பேசியது மாதிரி என்றைக்காவது ஒருநாள் மேடையில் ஸ்டாலின் கொள்கை பேசியிருக்காரா? ஸ்டாலினுக்கு கொள்கை பேசத்தான் தெரியுமா? ஈழம், சமூகநீதி பற்றி ஸ்டாலின் பேசிய அந்த கருத்து கருவூலங்கள் YouTube இல் உண்டா? இவர்கள் அபகரித்தச் சொத்துக்களை திரும்ப பெறுவதற்காகவே காவல்துறையில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவே தொடங்கப்பட்டதே! மறுக்க முடியுமா?                                                                               

இன்னொரு ஐந்து ஆண்டுகள் இவர்களை ஆள விட்டால், மொத்த தமிழ்நாட்டையும் திமுக மாவட்டச் செயலாளர்கள் பட்டா போட்டுவிடுவார்கள் என்ற பயத்தால் தானே மக்கள் 2011இல் அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டார்கள். அளவில் வேண்டுமானால் மன்னார்குடிக்கும் ஸ்டாலின் கும்பலுக்கும் வித்தியாசம் இருக்கலாம்.

ஆனால் திமுகவினர் கைசுத்தமானவர்கள் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா? ஸ்டாலினை நோக்கி இந்த கேள்விகளை கேட்பதேகூட சரியா? என்று நினைக்கத்தோன்றுகிறது. திராவிடர் இயக்க அடையாளத்தைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டு கொள்ளையடிப்பதில் தானே கவனம் செலுத்தியது திமுக? கேசி பழனிச்சாமிக்கும் மணல் குவாரிகளுக்கும் தொடர்பே கிடையாதா?

ஸ்டாலினுக்கு ஏனிந்த நாடகம்? அக்ரஹாரத்துக்கு அடிப்பணிந்துவிட்டால் செய்த ஊழல்கள் எல்லாம் மறைந்து உத்தமபுத்திரர்கள் ஆகிவிட முடியுமா? ஓபிஎஸ்ஐ எப்படி பழனிச்சாமிக்கு மாற்றாக சொல்ல முடியாதோ அப்படி தான் ஸ்டாலின் கூட்டமும்!

திமுகவில் ஏகப்பட்ட கொள்ளை கும்பல் தமது குடும்பத்தோடு காத்திருக்கிறது. அதனோடு ஒப்பிட்டால் மன்னார்குடி அவ்வளவு மோசமல்ல. மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு! அதை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது நமது கடமை!

(வாட்ஸ்அப் பதிவு)