அ.தி.மு.க. பொதுச்செயலாளர்  சசிகலா, சமீபத்தில் தனது உறவினரான டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். இந்த நிலையில் இன்று தினகரன், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், இன்று துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்காக நடந்த  நிகழ்ச்சியில், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தினகரன், சசிகலா உள்ளிட்டோரை கடந்த 2011-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கட்சியைவிட்டு நீக்கி இருந்தோடு எந்நாளும் அவர்கள் கட்சியில் சேர்க்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.