பதவியேற்ற பிறகு, தினகரன்

.தி.மு.க.துச்செயலாளர்  சசிகலா, சமீபத்தில் தனது உறவினரான டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். இந்த நிலையில் இன்று தினகரன், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், இன்று துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் தினகரன்.

“அரசியலில் நீண்டகாலமாக இருக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினராக செல்பட்டிருக்கிறேன். ஜெயலலிதா வேண்டுகோளுக்கிணங்க ஒதுங்கியிருத்தேன். மீண்டும் சின்னம்மா வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் செயல்படுகிறேன்” என்றார்.

அப்போது அவர், “எங்களுக்கு திமுக மட்டும் தான் பிரதான எதிர்கட்சி” என்று தெரிவித்த அவர், .”அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க தி.மு.க. சதி செய்கிறது.  தோல்வி விரக்தியில் தற்போது ஸ்டாலின் டில்லி சென்றிருக்கிறார்.

அதிமுக எத்தனையோ துரோகச் செயல்களை சந்தித்திருக்கிறது. அதிலெல்லாம் மீண்டு வந்திருக்கிறது. அதே போல இப்போது அ.தி.மு.க. ஆட்சியை  கலைக்க நினைக்கும் சதியையும் முறியடிப்போம். எந்தக் கொம்பனாலெம் ஒன்றும் செய்யமுடியாது. ஏனென்றால் இந்த ஆட்சி, ஒன்றரை கோடி தொண்டர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆர். ஜெ. ஆசியோடு தொடர்ந்து தமிழக மக்களுக்கு பாடுபடுவோம். சசிகலா வழிகாட்டுதலில் இந்த ஆட்சி நடக்கும்” என்றார்.

மேலும் கட்சியின் சட்டதிட்டங்களின் படியே  வி.கே.சசிகலா பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும்,  கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர் செல்வம்,  தன்னை பொருளாளர் என்று சொல்லிக்கொண்டு வங்கிகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்று குற்றம்சாட்டிய தினகரன் சட்டப்படி அந்த  கடிதம் செல்லுபடியாகாது என்றும் கூறினார்.

அதே நேரத்தில் தாய் கழகத்தில்  இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் தாய் மனதோடு வரவேற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது அவரைப் பற்றி பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

ஆர்.கே. நகரில் போட்டியிடுவீர்களா  என்று கேட்டதற்கு, அது குறித்து கட்சி முடிவு செய்யும் என்றார்.

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற முயற்சி நடப்பதாக வரும் தகவல் குறித்து கேட்டபோது, அப்படி ஏதும் முயற்சி நடக்கவில்லை என்று தினகரன் தெரிவித்தார்.