ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி  அப்போலோ மருத்துவமனைக்கு  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அப்போலோ மருத்துவமனை தரப்பில் பதில் மனு  தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் சிகிச்சை பெறும் நிலையில் ஒளிப்படங்கள் (ஃபோட்டோ) எதையும் வெளியிட வேண்டாம் என்று  கேட்டுக்கொண்டார். அதனால்தான் நாங்கள் அவரது  படத்தை வெளியிடவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜெயலலிதா படத்தை ஏன் வெளியிடவில்லை என்று இதுவரை பல்வேறு கட்சித்தலைவர்களும், செய்தியாளர்களும் கேட்டபோது அப்பல்லோ நிர்வாகம் பதில் கூறவில்லை.

இதே கேள்வியை சமூகவலைதளங்களில் பல்லாயிரம் பேர் கேட்டபோதும் அப்பல்லோ நிர்வாகம் மவுனத்தையே பதிலாக தந்தது.

இப்போது நீதிமன்றத்தில் வேறு வழியின்றி பதில் அளித்துள்ளது. இதுவே பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது” என்று தற்போது பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.