டில்லி

நேற்றைய ஐ பி எல் போட்டியில் டில்லி அணியைத் தோற்கடித்த சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

நேற்று டில்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐ பி எல்  ஆட்டத்தில்  டில்லீ கேபிடல்ஸ் அணியுடன் சென்னை கிங்ஸ் அணி மோதியது/  போட்டியில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 3 விக்கெட்கள் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது.இதில் டேவன் கான்வே 52 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 87 ரன்களும் ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 79 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.3 ஓவர்களில் 141 ரன்களை வேட்டையாடியது. ஷிவம் துபே 9 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் 22 ரன்கள் விளாசினார். ரவீந்திர ஜடேஜா 7 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களும் தோனி 4 பந்துகளில் 5 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து 224 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டில்லி கேபிடல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதில் தனிநபராகப் போராடிய கேப்டன் டேவிட் வார்னர் 58 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் சேர்த்து பதிரனா பந்தில் ஆட்டமிழந்தார்.  மேலும்  பிரித்வி ஷா 5, பில் சால்ட் 3, ரீலிரோசோவ் 0, யாஷ் துல் 13, அக்சர் படேல்15, அமன் ஹக்கிம் கான் 7, லலித் யாதவ்6, குல்தீப் யாதவ் 0 ரன்னில் நடையை கட்டினர். சிஎஸ்கே சார்பில் தீபக் சாஹர் 3விக்கெட்களை வீழ்த்தினார். தீக்சனா,பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

இதன் மூலம் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணியானது 17 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்து பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றில் கால்பதிப்பது இது 12-வது முறையாகும்.