மும்பை: அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் ஐபிஎல்2022 போட்டியில் இடம்பெறும் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ  தெரிவித்து உள்ளது. அதன்படி பிப்ரவரி 7, 8ந்தேதிகளில் ஏலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கான ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது. ஐபிஎல் விதிகளின்படி,  மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அணி முழுவதையும் கலைத்துவிட்டு, புதிய வீரர்களை தேர்வு செய்யும் வகையில் மெகா ஏலம் நடத்துவது வாடிக்கை.

2022ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் கலந்துகொள்கின்றனர். இதையடுத்து, ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டிருப்பதாக பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உள்ள அணிகளில் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்கவைத்க்கொள்ள முடியும் என்பதால், மற்ற வீரர்களை தேர்வு செய்ய அணி நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், புதிதாக இணைய உள்ள 2 புதிய அணிகளும் ஏலத்திற்கு முன்பாகவே, அவர்கள் விருப்படும்  3 வீரர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த ஏலம் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்றது போல மெகா ஏலமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்களின்படி, லக்னோ அணிக்கு கே.எல் ராகுல் கேப்டனாகவும், அகமதாபாத் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை தாங்குவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2022க்கான லக்னோ உரிமையாளரின் தலைமைப் பயிற்சியாளராக ஆண்டி ஃப்ளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அகமதாபாத் அணி டேவிட் வார்னர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்குப் பின் செல்லக்கூடும், அதே நேரத்தில் லக்னோ ரஷித் கானை ஏலம் எடுக்க தயாராக உள்ளது.