சென்னை,

ந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல், எரிவாயுக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் சில்லரை விற்பனைக்காகவும் அனுப்பப்பட்டு வருகிறது.

இதற்கான கட்டணத்தை ஐஓசி செலுத்தி வந்தது. இந்நிலையில், தற்போது புதிய விதியை அமல்படுத்தி உள்ளது.

அதன்படி, பெட்ரோலை ஐஓசி குடோனில் இருந்து  குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு சேர்ப்பதற்கு மட்டுமே கட்டணம் தர முடியும் என்றும், . பெட்ரோலை கொண்டு சேர்த்துவிட்டு திரும்புவதற்கு கட்டணம் தர முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய விதியை எதிர்த்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.