டெல்லி: சர்வதேச விமான சேவைக்கான தடை விரைவில் நீக்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சம் தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங் களில்  சர்வதேச விமானங்கள் அனுமதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து உலக நாடுகள், மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்கி வருகின்றன. அதன்படி, இரு டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டவர்கள் வர அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பலர் மீண்டும் வெளிநாடுகளுக்கு பயணித்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவும் மீண்டும் சர்வதேச விமான சேவையை தொடங்க உள்ளதாக  சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் ராஜீவ் பன்சல் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2020ம் ஆண்டு  ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல், இந்திய அரசு  சர்வதேச விமானங்களின் இயக்கத்திற்கு  தடை விதித்தது. ஆனால் சில கட்டுப்பாடுகளுடன் சரக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் சில நாடுகளுடனான காற்று குமிழி  ஒப்பந்தத்தின்படி, விமான சேவைகள் தொடங்கப்பட்டன. உள்நாடு, சில வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து முழுமையாக சர்வதேச விமான சேவைக்கான தடையை நீக்கி மீண்டும் சேவையை  தொடங்க மத்தியஅரசு முடிவு செய்து இருப்பதாகவும், முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில்  சர்வதேச விமானங்கள் அனுமதிக்கப்பட இருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.