இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நாட்டை வளமான பாதைக்கு கொண்டு செல்லும் ட்ரெய்லர் மட்டும் தான் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

budgetmodi

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. அதில் சில சுவாரசிய சலுகைகள் இடம்பெற்றன. 6.5 லட்சம் வரை வருவாய் இருந்தாலும் அவர்கள் வரி செலுத்த தேவையில்லை, 6 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு, மகப்பேறு விடுப்பு என பல்வேறு அம்சங்கள் இன்றைய பட்ஜெட்டில் இடம்பிடித்தன.

இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘ எங்களில் ஆட்சியில் எப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டில் ஏழ்மை குறைந்துள்ளது. விவசாயிகள் நிதி என்ற திட்டம் வரலாற்று சிறப்பு மிக்க திட்டமாகும். பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால தேர்தலுக்கு முன்பாக பட்ஜெட் நாட்டை வளமான பாதைக்கு கொண்டு செல்லும் ட்ரெய்லர் மட்டும் தான். இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை அனைவரும் பயனடைவர்’ என கூறினார்.