பாட்னா:

பீகார் மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத்தின் மனைவியுமான ராப்ரிதேவிக்கு சொந்தமான 3 சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி உள்ளது.

லாலுபிரசாத் மீது கால்நடை தீவன ஊழல் உள்பட அவர்மீதும், அவரது  குடும்பத்தி னர் மீதும், ஐஆர்சிடிசி ஒதுக்கீடு உள்பட பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில்,  மாட்டுத்தீவன ஊழல் வழக்கு உள்பட 2 வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ் தற்போது உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், தற்போது சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.  லாலு பிரசாத் யாதவ் சட்ட விரோதமாக பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் சில ஆண்டுகளுக்கு முன்பே சோதனை நடத்தி ஆவனங்களை கைப்பற்றினார். அதன்மீது இதுவரை நடவடிக்கை எடுக்ககாத வருமான வரித்துறையினர், தற்போது நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அடிக்கப்பட உள்ள நிலையில்,  ராப்ரி தேவி மற்றும் அவரது மகளுக்குச் சொந்தமாக பாட்னா புறநகர் பகுதியிலிருந்த 3 இடங்களை முடக்கி உள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.