கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில், திருமணத்திற்கு முன்பு, மாப்பிள்ளை அழைப்பின்போது, ரோடு போடுவதற்கு பயன்படுத்தப்படும் ரோடு ரோலர் வாகனத்தில் மாப்பிள்ளை ஊர்வலமாக அழைத்து செல்லப்பபட்டார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக திருமணத்தின்போது, மாப்பிள்ளை அழைப்பு நடைபெறுவது வழக்கம்.  இதற்காக அலங்கரிக்கப்பட்ட கார்கள் அல்லது குதிரை மாட்டப்பட்ட சாரட் வண்டி போன்றவற்றில்  மாப்பிள்ளையை அழைத்து வருவார்கள்.

ஆனால், மேற்கு வங்காளத்தில் உள்ள நதியா மாவட்டத்தில் வித்தியாசமான முறையில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது.  ரோடு போடும்போது பயன் படுத்தப்படும் வாகனமான  ரோடு ரோலர் வாகனம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டு, அதில் மாப்பிள்ளை அக்ரா என்பவரை  ஏற்றி ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

கல்யாண மாப்பிள்ளை ரோடு ரோலர் வாகனத்தில் உற்சாகமாக ஊர்வலம் வரும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.