அமராவதி:

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என அறிவித்து விட்டு, தற்போது வழக்க மறுத்து மோடி அரசின் துரோகத்தை கண்டு எனக்கு ரத்தம் கொதிக்கிறது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

ஆந்திர சட்டமன்றத்தில் கருப்பு உடையில் சந்திரபாபு நாயுடு

இன்று மத்திய பாஜக அரசுக்கு எதிரான நாள், ஆந்திராவில் கடைபிடிக்கப்பட்டு வரும் கருப்புஉடையில் சட்டமன்றத்திற்கு வந்திருந்த சந்திரபாபு நாயுடு, சட்ட மன்றத்தில் பேசும்போது மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாக சாடினார்.

ஆந்திர மாநிலத்துக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மோடி உறுதி அளித்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு. ஆனால், பின்னர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்ததஸ்து தர மத்தியஅரசு மறுத்து விட்டது.

இதையடுத்து கூட்டணியில் இருந்து பிரிந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வருகிறார். அதேவேளையில், பாராளுமன்ற வளாகத்திலும் தெலுங்குதேச எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாராளுமன்ற வளாகத்தில் கருப்பு உடையுடன் தெலுங்குதேச எம்.பிக்கள்

இன்று பாராளுமன்றத்தில்  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், தெலுங்குதேச கட்சி எம்.பி.க்கள் மோடி அரசுக்கு எதிராக ஆந்திர எதிர்ப்பு தினத்தை கடைபிடிக்கும் வகையிலும்,  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரியும் கருப்பு உடை அணிந்து பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

அதேநேரத்தில் ஆந்திர சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் சந்திர பாபு நாயுடு உள்பட தெலுங்கு தேச எம்எல்ஏக்களும் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர்.

சட்டமன்றத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக உறுதி அளித்த  மத்திய அரசு, தற்போது அநீதி இழைத்துள்ளது. இதை பார்க்கும்போது  எனக்கு ரத்தம் கொதிக்கிறது என்று ஆவேசமாக பேசினார்.

இன்று பிப்ரவரி 1ந்தேதி, இந்த தினம் மத்தியஅரசுக்கு எதிரான நாள் என்று கூறியவர், மோடி அரசின் துரோக்கத்தால் ஆந்திர மக்கள் கொதித்து போய் உள்ளனர.

இவ்வாறு அவர் கூறினார்.