டெல்லி:
வெளிநாடு தீவிரவாதிகள் கடல்வழியாக இந்தியாவில் ஊடுருவுவதை தடுக்க கடலோர காவல்படை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் பாரிக்கர் தெரிவித்து உள்ளார்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற கடலோர காவல்படை கமாண்டர்கள் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் மற்றும் பாதுகாப்புத்துறை மற்றும் கடலோர காவல்படையின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
1coatal-guard
மாநாட்டில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் , தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையை கருதி, கடல் வழியாக தேசவிரோத சக்திகள் ஊடுருவும் நிலை உள்ளது. இதுபோன்ற ஊடுருவலை தடுக்க கடலோர காவல் படை தனது ரோந்துப் பணியை அதிகரித்து, கடலோர பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், கடலோர காவல்துறை  செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதி அளித்தார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கடலோர காவல் படையின் எதிர்கால திட்டங்கள், சவால்களை திறமையுடன் சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.