பாகிஸ்தானை தனிமைப்படுத்த மோடிக்கு முழு ஆதரவு: காங்கிரஸ்

Must read

பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு தரும் என்று காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது மற்றும் பி.சி சாக்கோ ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளார்.

pc

பாகிஸ்தான் எல்லை தாண்டி வந்து செய்துவரும் பயங்கரவாத செயல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. முதலில் பதான்கோட் இப்போது உரி என்று இந்த நிலை மீண்டும் தொடராது இருக்க ஆவண செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும். இதை மீடியாக்களில் பேசிக்கொண்டிராமல் நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசி ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்ததையடுத்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டானாகிய நாடுகளும் புறக்கணித்துள்ளன. இது பாகிஸ்தானுக்கு பெரிய நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article