புதுடெல்லி: நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியானது, கடந்துபோன ஆகஸ்ட் மாதத்தில் 8% சரிந்துள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தயாரிப்புத் துறை, சுரங்கம், மின்சாரம் ஆகிய பிரிவுகளில் உற்பத்தி நடவடிக்கைகள் குறைந்துபோனதே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
மத்திய புள்ளியியல் அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியானது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 8% அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இதுவே, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி 1.4% சரிவைக் கண்டிருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில், தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் தரவுகள் அடிப்படையில் பார்க்கும்போது, தயாரிப்புத் துறையின் வளர்ச்சி 8.6% அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இதேபோல், சுரங்கத் துறையின் உற்பத்தி வளர்ச்சி 9.8%குறைந்துள்ளது. மேலும், மின்சாரத் துறை உற்பத்தியும், 1.8% குறைந்துள்ளது. மூலதன பொருட்கள் உற்பத்தி வளர்ச்சியும் 15.4% குறைந்துள்ளது.