ஐ.சி.சி. இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய பிரபலம் யார் தெரியுமா?

Must read

துபாய்:

ர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இந்தியாவை சேர்ந்தவரும், பெப்சி நிறுவனத்தின் தலைவருமான இந்திரா நூயி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்  ஐ.சி.சியின் முதல் பெண் இயக்குனராக பொறுப்பேற்க உள்ளார்.

ஐ.சி.சியின் இயக்குனரை தேர்வு செய்வதற்கான வாரியக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பெப்சி நிறுவன தலைவராக உள்ள இந்திரா நூயியை இயக்குனராகத் தேர்வு செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒருமனதாக ஆதரவும் கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்தியாவை சேர்ந்த இந்திரா நூயி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திரா நூயி வரும்  ஜூன் மாதம் பொறுப்பேற்பார் என்றும்,  அவருடைய பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள்.

ஐ.சி.சியின் இயக்குனராக பெண் ஒருவர் முதல்முதலாக நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திரா நூயி,  இந்த தேர்வு தனக்கு  சந்தோஷமளிப்பதாகவும், ஐ.சி.சி நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற தான்  ஆர்வமாக இருப்பதாகவும்  கூறியுள்ளார்.

“ஐ.சி.சியின் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் இந்திரா நூயியின் பங்களிப்பு சிறப்பானதாக இருக்கும் என்று ஐ.சி.சி.யின் தற்போதைய  தலைவர் ஷஷாங்க் மனோகர் கூறியிருக்கிறார்.

More articles

Latest article