“மம்தா பானர்ஜி ஒரு பெண் காந்தி”: ஹர்திக் படேல் புகழாரம்

Must read

கொல்கத்தா:

மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக களமிறங்கி உள்ள பட்டேல் இனத்தலைவரான  குஜராத்தை சேர்ந்த ஹர்திக் படேல் நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மம்தாவுடன் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பட்டேல், மம்தான பானர்ஜி ஒரு பென் காந்தி என்று புகழாரம் சூட்டினார்.

குஜராத்தின் படேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் படேல், குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறார். பதிதார் அந்தோலன் சமிதி அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

குஜராத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்த போட்டி யிட்டு வெற்றி பெற்றுள்ளார். இளைஞரான ஹர்திக் பட்டேலின் பாஜ எதிர்ப்பு அரசியல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஹர்த்திக் பட்டேல்,  மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் உள்ள  அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. இவர்களின் சந்திப்பு இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மம்தா பானர்ஜியை சந்தித்து குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்திக் பட்டேல், குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதற்காக வாழ்த்து பெற மட்டுமே மம்தாவை சந்தித்தாக கூறினார்.

தன்னிடம், மம்தா அவரது கட்சியில் இணைந்து பணியாற்றும்படி அழைப்பு விடுத்தார். நான் அவரை குஜராத் வருமாறு அழைப்பு விடுத்தேன் என்றார்.

மேலும்,  அவர் குஜராத் வருகை தந்தால், அது  எங்கள் மாநில பெண்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கும் வகையில் அமையும் என நம்புவதாகவும், ஏற்கனவே கடந்த   2001-ம் ஆண்டு பூஜ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, மம்தா பானர்ஜி செய்த பணிகள் சிறப்பானவை என்றும் கூறினார்.

மம்தா பானர்ஜி ஒரு பெண் காந்தி என்று புகழ்ந்த ஹர்திக் பட்டேல்,  2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் மம்தாவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்றும்,  நாட்டை பிரிக்க நினைப்பவர்களுக்கு எதிராக திரண்டு ஒன்றாக இணைந்து பாடுபடுவோம் என்றும் கூறினார்.

More articles

Latest article