கொல்கத்தா:

மோடி அரசுக்கு எதிராக அணி திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை மற்றும் பொதுக்கூட்டம் இன்று மேற்கு வங்க தலைவர் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெறும்  பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்களான குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சரத்பவார், அகிலேஷ் யாதவ், ஓமர் அப்துல்லா என 22 கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாஜகவின் அதிருப்தியாளர்களான முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த்சின்ஹா, சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோரும் மம்தாவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தலைவர்கள் பேசுவதற்காக 5 மேடைகளை ஒருங்கிணைத்து பிரம்மாண்டமான மேடை அமைக்கப் பட்டுள்ளது. 20 கண்காணிப்பு கோபுரங்கள், ஆயிரம் மைக்ரோ போன்கள், 30 எல்.இ.டி தொலைக் காட்சித் திரைகள் உள்ளிட்டவை அமைக்கப்ப்டடுள்ளன. பத்தாயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது பிரமாண்டமான எதிர்க்கட்சி தலைவர்களின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில்திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, வங்கப் புலி களுக்கு எனது வணக்கம் என்று வங்கமொழியில் பேச்சைதொடங்கியவர் தொடர்ந்து தமிழில் ஆவேசமாக பேசினார்.

சுதந்திர போராட்டத்தில் இந்தியாவும் மேற்கு வங்கமும் முக்கிய பங்காற்றின. அரசியல், இலக்கியம், ஆன்மீகம் என அனைத்திலும் தமிழர்களும், வங்காளிகளும் சகோதர-சகோதரிகள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தமிழகமும், வங்கமும் முக்கிய அங்கம் வகித்தன.  நான் இப்போது, இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அழைப்பின்பேரில் இங்கு வந்துள்ளேன். மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பதுதான் 2வது சுதந்திர போராட்டம்.  இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம், வரும் மே மாதம் நடைபெறவுள்ளது.

இந்த  மேடையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். அனைவரின் சிந்தனையும் ஒன்றுதான்; பாஜகவை வீழ்த்த வேண்டும் – மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே அது

வேற்றுமையில் ஒற்றுமை என்பதையே, நமது முன்னோர்கள் இந்தியாவின் தாரக மந்திரமாக கூறினார்கள் நாம் வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருந்தால், மோடியை வீழ்த்த முடியும்.

எதிரிகளே இல்லை; எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியா என்று பிரதமர் மோடி கூறி வந்தார். ஆனால், கடந்த வாரங்களாக பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளைத் தான் விமர்சித்து வருகிறார் ஒவ்வொரு கூட்டத்தில் மைக்கை பிடித்ததும், எதிர்க்கட்சிகளைத் தான் திட்டுகிறார் மோடி எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தது பிடிக்கவில்லை என்பதை விட, பிரதமர் மோடி பயந்துபோய் இருக்கிறார்

நமது ஒற்றுமை, நரேந்திர மோடியை பயங்கொள்ள வைத்துள்ளது; எனவே நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தால் தேனாறும் பாலாறும் ஓடும் என வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினார் மோடி. 100 கூட்டங்களில் பேசிய மோடி, ஆயிரம் பொய்களை சொல்லி யிருப்பார்

பிரதமர் மோடி சொன்ன பொய்களில் மிகப்பெரியது பொய், கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு வருக்கும் தலா ரூ.15 லட்சம் தருவேன் எனக் கூறினார் சொன்னபடி செய்தாரா பிரதமர் மோடி; மக்களின் தலையில்தான் கல்லைப் போட்டார்

பெட்ரோல் விலை உயர்ந்தது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய பிரதமர் மோடி, உலகம் சுற்றுகிறார்  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சி, மிகப்பெரிய நிறுவனங்களுக்கான ஆட்சி – மக்களுக்கான ஆட்சி இல்லை

ஊழல் இல்லாத ஆட்சி, ஊழல் புகார் யாரும் சொல்ல முடியாது என பிரதமர் மோடி கூறினார் தற்போது பிரதமர் மோடி இந்தியாவில் இருக்கிறாரா? அல்லது வெளிநாட்டில் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை

ரஃபேல் விவகாரம் ஊழல் இல்லாமல், வேறு என்ன? விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடியை ஆகியோரை தப்பவிட்டது ஊழலில்லையா? ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது ஊழலில்லாமல் வேறென்ன?

மோடி ஆட்சியில் அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது போல, ஊழலும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும்.

பிரமாண்டமான பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள மம்தா பானர்ஜி அவர்களுக்கு நன்றி நரேந்திர மோடி ஒரு சிலரைப் பார்த்தால் பயப்படுவார் – அவர் மம்தா பானர்ஜியை பார்த்து பயப்படுகிறார் அதனால் தான் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மேற்கு வங்கத்துக்கு வரப் பயப்படுகின்றனர்.

கலைஞர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர் மம்தா பானர்ஜி பாஜகவை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும், அனைத்து தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் தனித் தனியாக இருந்தால் பாஜகவை வீழ்த்த முடியாது – இதை அனைவரும் உணர வேண்டும் நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும் – நமது ஒற்றுமை வெற்றியை தரும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.