இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” இந்திய அணியை பல வருடங்களாக வழி நடத்தியதற்கு பெருமைப்படுகிறேன்.

இந்திய அணியில் தற்போது திறமையான வீரர்கள் பலர் இருக்கிறார்கள்.

நான் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்” என்று கூறியுள்ளார்.

ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மித்தாலி ராஜ், பெண்கள் கிரிக்கெட்டிற்கு வேறு வகையில் பங்களிப்பு செலுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்து வந்த மித்தாலி ராஜ் இதுவரை இந்திய அணிக்காக 232 போட்டிகளில் விளையாடியுள்ளார், 7805 ரன்களும், 50.68 சராசரியும் வைத்துள்ளார்.

39 வயதாகும் மித்தாலி ராஜ், மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.