டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு உலக நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், அடுத்து பாகிஸ்தானுக்கு இலவசமாக அனுப்பப்பட உள்ளது. இந்த தடுப்பு மருந்து, பாகிஸ்தான் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 20 சதவிகிதம் பேரின் தேவையை பூர்த்தி செய்யும் என கூறப்பட்டு உள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று  மேலும் பரவாமல் இருக்க தடுப்பூசிகள் போடும் பணி உலககெங்கும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பயன் பாட்டுக்கு வந்துள்ள கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள், 65 நாடுகளுக்கு இந்தியா சப்ளை செய்கிறது. பல நாடுகள் மானிய அடிப்படையில் தடுப்பூசி பெற்றுள்ளன. ஏழ்மையில் உள்ள ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் உள்பட உலகின் 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா சார்பில் இலவசமாக தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பொருளாதார சிக்கலில் திண்டாடி வரும் பாகிஸ்தானுக்கும் இந்தியா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. பாகிஸ்தானில் நிலவும் கடினமான பொருளாதார சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் (Imran Khan), அந்நாட்டு மக்களுக்கு செலுத்த கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) வாங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் மக்களுக்க, மேட் இன் இந்தியா தடுப்பூசியின் 4.5 கோடி டோஸ் பாகிஸ்தான் மக்களுக்கு இலவசமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா (Oxford-AstraZeneca) கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு, பாகிஸ்தானுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. சுமார் 40மில்லியன் டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ளது.  இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் பாகிஸ்தான் இருந்து வந்தாலும், கொரோனா தொற்று பரவலை (Coronavirus) சமாளிக்க இந்தியா முன்வந்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியா சார்பில் வழங்கப்பட உள்ள  தடுப்பூசி சர்வதேச கூட்டணி GAVI மூலம் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் என்றும், இது, அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில், சுமார் 20% மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் என கூறப்படுகிறது.

இதை பாகிஸ்தானின் தேசிய சுகாதார சேவை செயலாளர் அமீர் அஷ்ரப் கவாஜா (Aamir Ashraf Khawaja)  உறுதிப்படுத்தி உள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை இந்தியா உலகிற்கு வழங்கி, உலகின் மருத்துவ மையமாக திகழ்கிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா செய்வது மிகப்பெரிய உதவி. இன்று இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் உலகையே காக்கின்றன, அதை குறைத்து மதிப்பிடுவது தவறு, இந்திய கொரோனா தடுப்பூசிகளை உலகிற்கு வழங்கி உலகையே காப்பாற்றி வருகிறது என அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி டாக்டர் பீட்டர் ஹோடெஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.