மும்பை:
காராஷ்டிர மாநிலம் தானே மாநகராட்சியில் உள்ள 89 கரோனா ஹாட்ஸ்பாட்டுகளில் 31-ம் தேதி வரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று நகரில் புதிதாக 1,012 பேர் பாதிக்கப்பட்டனர். நகரில் இதுவரை 3 லட்சத்து 35 ஆயிரத்து 584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 11 ஆயிரத்து 506 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்து உள்ளது.

இந்தநிலையில் மும்பையின் புறநகர் பகுதியான தானே மாவட்டத்திலும் தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த மாநகராட்சியில் மட்டும் இதுவரை 89 ஹாட்ஸ்பாட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடுமையான கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக தானே மாநகராட்சியில் உள்ள 89 ஹாட்ஸ்பாட்டுகளில் மார்ச் 13-ம் தேதி வரை 31-ம் தேதிவரை லாக்டவுன் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் வெளியே செல்லவும், மற்றவர்கள் இங்கு வரவும் முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய செயல்பாடுகளை தவிர அனைத்தும் தடை செய்யப்படுகிறது.