2வது ஒருநாள் போட்டி: முதல் முறையாக டக் அவுட்டான ரோஹித்!

Must read

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஷான் மார்ஷ் மற்றும் நாதன் லயனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

2nd

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி ஐதராபாத்தில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றதால், இதில் ஆஷ்டோன் டர்னர் மற்றும் ஜேசன் பெரேண்டர்ப் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷான் மார்ஷ் மற்றும் நாதன் லயன் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதலில் இந்திய அணி சார்பில் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். வந்த வேகத்திலேயே ரோஹித் சர்மா டக் அவுட்டாகி கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார். சொந்த மண்ணில் ரோஹித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறியது இதுவே முதல் முறை. அதேபோன்று, 21 ரன்கள் எடுத்த ஷிகர் தவான், மேக்ஸ்வெல் பந்து வீச்சில் வெளியேறினார். இதனை தொடர்ந்து 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி விளையாடி வருகிறது.

More articles

Latest article