ஐசிசியின் பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை கோஸ்வாமி முதலிடம் பிடித்துள்ளார்.

1324

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியின் பெண்கள் அணிக்கான தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை கோஸ்வாமி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர் பட்டியலில் ஜூலன் கோஸ்மி முதலிடத்தில் உள்ளார்.

இந்தியாவின் மற்றுமொரு வீராங்கனை ஷிகா பாண்டே 12வது இடத்தில் உள்ளார். அதேபோன்று, அணிகளுக்கு இடையேயான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும், நியூசிலாந்து அணி 3வது இடத்திலும், இங்கிலாந்து அணி 4வது இடத்திலும் உள்ளன.