டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,503 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே வேளையில், 7,678 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதுடன்,  624 பேர் உயிரிந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் புதிதாக மேலும்  8,503 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,46,74,744 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் மேலும் 624 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம்  உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 4,74,735 ஆக  உள்ளது- உயிரிழந்தோர் விகிதம் 1.37% ஆக இருக்கிறது.

கடந்த 24மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 7,678 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,41,05,066 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.36% ஆக இருக்கிறது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 94,943 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.27% ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,31,18,87,257 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 74,57,970 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 65,32,43,539  மாதிரிகள் சோதிக்கப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 12,93,412 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.