புதுடெல்லி: இந்தியாவின் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்திருப்பதால், சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆஸ்ட்ராஸெனகா தடுப்பு மருந்தின் அனைத்து முக்கிய ஏற்றுமதி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வ‍ைத்துள்ளது இந்தியா என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவானது, இந்த தடுப்பு மருந்தை எதிர்பார்த்திருக்கும் நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுவரை, சீரம் நிறுவனத்திலிருந்து 17.7 மில்லியன் ஆஸ்ட்ராஸெனகா டோஸ்களை கோவாக்ஸ் பெற்றுள்ளது. இந்தியா மொத்தமாக 60.5 மில்லியன் டோஸ்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த தடுப்பு மருந்தை உலகளவில் பல நாடுகள் நம்பியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா தனது சொந்த தடுப்பு மருந்து திட்டத்தை விரிவுபடுத்துவதால், கடந்த வியாழக்கிழமை முதற்கொண்டு, எந்த தடுப்பு மருந்து விநியோகமும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், உள்நாட்டிலேயே தேவை அதிகரிக்கையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருப்பது சாத்தியமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.