சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

Must read

சென்னை:  
சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு வரும் 7 மற்றும் 9-ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 75-ஆவது சுதந்திர தின விழா வரும் 15ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 7 மற்றும் 9-ஆம் மற்றும் 13-ஆம் தேதிகளில் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு மூன்று நாட்களில் காலை 6.30 மணி முதல் 10 மணி வரை கீழ்க்கண்ட வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article