ஒலிம்பிக் வீரர் ரவி குமார் தாஹியாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Must read

சென்னை:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ரவி குமார் தாஹியாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இரண்டு வெள்ளி, மூன்று வெண்கல பதக்கங்கள் என ஐந்து பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் 65வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் ஆண்களுக்கான 57 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் ரவி குமார் தாஹியா, உருகுவே நாட்டின் வீரருடன் மோதினார்.

இந்த போட்டியில் ரவி குமார் தாஹியா தோல்வி அடைந்த போதிலும், இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

இதையறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரவி குமார் தாஹியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒலிம்பிக் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்ற இரண்டாவது இந்திய வீரர் ரவி குமார் தாஹியா. அவரது எதிர்கால வெற்றிகளுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article