ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக நாளை முதல்வர் ஆலோசனை

Must read

சென்னை:
ரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிற்பகல் 12:30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் ஈரோடு திருப்பூர் கோவை சென்னை ஆகிய பகுதிகளில் அதிகரித்து வருவதை அடுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நாளை பிற்பகல் 12.30 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்ய உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

More articles

Latest article