13வது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டம் அகமதாபாத் நகரில் இன்று நடைபெறுகிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்தப் போட்டியைக் காண உலகெங்கும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் வந்து குவிந்துள்ளனர்.

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்த அந்தந்த நாட்டு பிரபலங்களும் தயாராகி வருகின்றனர்.

2023 உலகக்கோப்பை தொடரில் இதுவரை அனைத்துப் போட்டிகளிலும் வென்று வலுவான இடத்தில் உள்ளது இந்தியா.

https://x.com/SaraTendulkar__/status/1725820499010232690

லீக் ஆட்டங்களில் 7 போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா 2 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கோட்டை விட்டதால் அதிர்ஷ்டவசமாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.

இந்த நிலையில் லீக் ஆட்டத்தில் தோற்கடித்த மற்றொரு அணியான இந்திய அணியுடன் மோத உள்ளதை அடுத்த அரையிறுதியில் அடித்த அதிர்ஷ்டம் ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் அடிக்குமா என்பதை டாஸ் உறுதிசெய்யும்.

இருந்தபோதும் இந்த சீசனில் அனைத்துவிதமான போட்டிகளிலும் சிறந்த அணியாக முதலிடத்தில் உள்ள இந்தியா தனது திறமையால் வெற்றிபெறும் என்றே ரசிகர்கள் எதிர்பார்்ப்புடன் காத்திருக்கிறார்கள்.