கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள், நண்பர்கள், உதவியாளர்  வீடுகளில்  நேற்று தொடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை இன்று  2ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் எம்.பி. சம்பத் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுக்கும் வகையில், தனது நண்பர்கள், ஆதரவாளர்கள் சிலரிடம் பணம் மற்றும் ஆவணங்கள் கொடுத்து வைத்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு நேற்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கடலூரில் உள்ள எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர் பாலகிருஷ்ணன், சூரப்பன் நாயக்கன்சாவடியில் அதிமுக பிரமுகர் மதியழகன் உள்பட மொத்தம் 8 பேருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இ

சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எம்.சி.சம்பத் மீதான வருமான வரி ஏய்ப்பு, மறிறும் பணப் பரிமாற்ற முறைகேடு தொடர்பா புகாரின் அடிப்படையில்  இன்று 2வது நாளாக சோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள வருமான வரித்துறை,  பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் அதுகுறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்னர்.