மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால், பொதுமக்கள் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

மேட்டூர் அணைக்கு நேற்று 282 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 271 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

நேற்று 44.39 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 44.26 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்காத பட்சத்தில் மேலும் நீர்மட்டம் சரிய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பிற மாவட்டங்களை போல, சேலத்திலும் குடிநீர் பஞ்சம் ஏற்படுமோ என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.