புதிய முதல்வராக, எடப்பாடி பழனிச்சாமி  நேற்று பொற்றுப்பேற்றார். இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசிக்கும், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவை உடனே காலி செய்ய வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை செயலர் அலுவலகத்தில் இருந்து இந்த நேட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியேற்ற பிறகு, புதிய தமிழக அரசின் முதல் நவடிக்கை இது.

சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கைகளை  ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டதாலேயே வீட்டை காலி செய்யும்படி அவசர அவசரமாக புதிய அரசு உத்தரவிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

ஒருவேளை ஓ.பி.எஸ்., அந்த இல்லத்தை உடனடியாக காலி செய்யாவிட்டால் குடி நீர், கழிவுநீர் இணைப்புகளும் மின்சாரமும் துண்டிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

ஓ.பி.எஸூக்கு எம்.எல்.ஏ. என்ற முறையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள விடுதியில் அறை ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.