ஜெ. சமாதியை அகற்ற வலியுறுத்தல்!

Must read

ஜெயலலிதாவை ஊழல் கிரிமினல் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாட புத்தகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்ற வேண்டும் என்றும், மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சமாதியை அகற்ற வேண்டும் என்றும் “மக்கள் அதிகாரம்” என்ற அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

கிரிமினல் குற்றவாளிக்கு அரசு மரியாதையோடு மெரினாவில் சமாதி அமைத்திருப்பது சட்டவிரோதம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் அதிகாரம் போராடும் என்றும் அறிவித்துள்ளது.

:ஜெயலலிதா. சமாதியை அகற்ற வேண்டும்” என்ற கோரிக்கை எழுந்துவருகிறது என்பதை கடந்த 15ம் தேதி, நமது இதழில் செய்தியாக வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

https://patrikai.com/what-happends-in-jayalalitha-tomb/

More articles

Latest article