டெல்லி: சட்டவிரோத நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அபிசேக் பானர்ஜி, அவரது மனைவி ருத்ராவையும் விசாரிக்க அனுமதி வழங்கியது.

நிலக்கரி கடத்தல் வழக்கில் மம்தா பானர்ஜி மருமகன் அபிசேக் பானர்ஜி மற்றும்  அவரது மனைவி மற்றும் மேற்குவங்க மாநில அமைச்சர் மற்றும் கட்சி நிர்வாகிக்கும்  அமலாக்கத்துறை கடந்த ஆண்டு சம்மன் அனுப்பி உள்ளது. மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டிக் கடத்தியவர்களிடம் பெருந்தொகை லஞ்சம் பெற்றதாக அபிசேக் பானர்ஜி மற்றும்  அவரது மனைவி  ஆகிய இருவர் மீதும் சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிந்துள்ளன.

இந்த வழக்கு விசாரணைக்கு டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2021ம் ஆண்டு செப்டம்பர் 1ந்தேதி ருஜிராவும், செப்டம்பர் 6ந்தேதி  அபிசேக்கும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இது குறித்துக் கருத்துக் கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மத்திய அரசு புலனாய்வு முகமைகளைத் தங்கள் மீது ஏவி அச்சுறுத்துவதாகத் குற்றம்சாட்டினார். மேலும்,  அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக அனுமதி மறுத்து வந்தார்.

இதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமனற்த்தில் அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. ஆனால், அதற்கும் அவர்கள் ஆஜராகவில்லை.

இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் முதல்கட்ட விசாரணையின்போது, மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் மருமகன் அபிஷேக், மனைவியை டெல்லிக்கு வரவழைத்து விசாரிக்க இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது. வழக்கின் பலகட்ட விசாரணையைத் தொடர்ந்து, இன்று உச்சநீதிமன்றம் மேற்குவங்க அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளதுடன்,  அமலாக்கத்துறை விசாரணைக்கு மேற்கு வங்க அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அமலாக்கத்துறை விசாரணையை மேற்கு வங்க அரசு தடுத்து நிறுத்த முயல்வதை எந்த வகையிலும் ஏற்க இயலாது என காட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

நிலக்கரி கடத்தல் வழக்கில் மம்தா பானர்ஜி மருமகன், அவரது மனைவி, அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்!