கொல்கத்தா: நிலக்கரி கடத்தல் வழக்கில் மம்தா பானர்ஜி மருமகன் அபிசேக் பானர்ஜி மற்றும்  அவரது மனைவி மற்றும் மேற்குவங்க மாநில அமைச்சர் மற்றும் கட்சி நிர்வாகிக்கும்  அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதற்கு முதல்வர் மம்தா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்கத்தில் நிலக்கரி கடத்தல் வழக்கில், நிலக்கரி கடத்தில் செய்த கொள்ளையர்களிடம் இருந்து, மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மருமகன் அபிசேக் பானர்ஜி மற்றும், அவரது மனைவி  ருஜிராவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருஜிரா பானர்ஜிக்கு அமலாக்க இயக்குன ரகம்  அடுத்த வாரம் விசாரணைக்கு டெல்லியில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. மேலும்,  மேற்கு வங்க அமைச்சர் மோலோய் கட்டக்க் மற்றும் டிஎம்சியின் பிர்பூம் மாவட்டத் தலைவர் அனுப்ரதா மோண்டலுக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது.

அமலாக்கத்துறை தங்களுக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் மற்றும் அவரது மனைவி சார்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டயமண்ட் ஹார்பர் எம்பி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், அந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், நிலக்கரி முறைகேடு வழக்கில், சம்பந்தப்படடவர்களுகக்கு ED நோட்டீஸ் அனுப்ப முடியும் என்றும், அபிசேக் பானர்ஜி, ருஜிராவ் பானர்ஜி ஆகிய இருவரும் தேசிய தலைநகரில் உள்ள அமலாக்கத்துறை  அலுவலகத்தில்  ஆஜராக வேண்டும் என்றும் கூறியது.

இதையடுத்து அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி, டெல்லியில்  விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு உள்ளது. இருவரும் அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மனில் தெரிவித்துள்ளது. இது மம்தாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமலாக்கத்துறையின் சம்மன் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய புலனாய்வு அமைப்பு, கூண்டில் அடைக்கப்பட்ட கிளி போல் செயல்படுகிறது என்றும்,  எதிர்க்கட்சித் தலைவர்களை “மத்திய அரசின் விருப்பப்படி” குறிவைப்பதாக அவர் குற்றம் சாட்டினார். “சிபிஐ, இடி போன்ற ஏஜென்சிகள் வெட்கமின்றி எதிர்க்கட்சிகளுக்க எதிராக பயன்படுத்தப்படுகின்றன. மத்திய அரசு எதை ஆணையிட்டாலும், இந்த ஏஜென்சிகள் அதை செய்கின்றன. எதிர்க்கட்சிகள் மீது மட்டுமே சிபிஐ வழக்குகள் போடப்படுகின்றன. எதிர்ப்பை அடக்க சிபிஐ பயன்படுத்த முடியாது,” என்று அவர் கூறினார்.