காரைக்குடி

த்திய அரசு விதிக்கும் வரிகளைக் குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

நாடெங்கும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பொதுமக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.  நாட்டில் பல இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டி உள்ளது.  இந்த விலை உயர்வால் போக்குவரத்து கட்டணம்  உயர்ந்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்வைச் சந்தித்து வருகின்றன

இந்நிலையில் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் செய்தியாளர்களிடம், ”மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து எந்த காரணத்தையும் இதுவரை சொல்லவில்லை. இந்த விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசின் வரிவிதிப்பு கொள்கை தான். முன்பு நான் நிதியமைச்சராக இருந்தபோது, கச்சா எண்ணெய் பேரலுக்கு 105 டாலர் விலை இருந்த போதும் இந்த விலை உயர்வு இல்லை.

ஆனால் கச்சா எண்ணெய் தற்போதைய விலை பேரலுக்கு 70 டாலர் அதாவது மூன்றில் இரண்டு பங்கு விலை தான் விற்கிறது.  அன்று பெட்ரோல் ரூ.55க்கு விற்க முடிந்தது.  ஆனால் பாஜகவினரால் இன்று ரூ.100க்கு விற்கப்படுகிறது. ஆகவே பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க ஒரே வழி மத்திய அரசு போடக்கூடிய வரிகளைக் குறைக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.