டில்லி

ந்திய விமானப்படையின் சு 30 ஜெட் விமானங்களிலும் ஸ்பைஸ் 2000 ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன.

கடந்த மாதம் பாலாகோட்டில் நடந்த இந்திய விமானப்படை தாக்குதலில் ஸ்பைஸ் 2000 என்னும் இஸ்ரேல் நாட்டு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஏவுகணை ஏவப்படும் இடத்தை துல்லியமாக சென்று தாக்கி உள்ளது. இந்த ஏவுகணகள் மிராஜ் 2000 போர் விமானங்கள் மூலம் ஏவப்பட்டுள்ளன. பாலகோட் பகுதியில் பயிற்சி முகாமிட்டிருந்த ஜெய்ஷ் ஈ முகமது தீவரவாதிளை இந்த ஏவுகணை அடியோடு அழித்துள்ளது.

தற்போதுள்ள நிலையில் இந்த ஏவுகணைகள் மிராஜ் 2000 போர் விமானங்களில் மட்டுமே இந்த ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த ஏவுகணைகளை சூ 30 ரக போர் விமானங்களின் மூலம் ஏவி சோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி இந்த ஏவு கணைகள் சு 30 ரக விமானங்களிலும் பொருத்தப் பட உள்ளன.

இந்த ரஷ்ய தயாரிப்பான சு 30 போர் விமானம் ப்ரமோஸ் ஏவுகணைகளை சோதிக்க பயன்படுத்தப்பட்டுள்ளன. உலகின் மிக வேகமான ஏவுகணையான ப்ரமோஸ் ஏவுகணைகளையே பொருத்தும் அளவுக்கு சு 30 ரக விமானங்கள் உள்ளதால் இவ்வகை விமானங்கள் ஸ்பைஸ் 2000 ஏவுகணைகளையும் மிக எளிதாக கையாளும் என கூறப்படுகிறது.