இனிமேல் தேர்தலில் போட்டியிடவே மாட்டேன்…! கருணாஸ்

Must read

மதுரை,

திண்டுக்கலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கருணாஸ், இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று அதிரடியாக கூறி உள்ளார்.

இனிமேல் சினிமாவில் மட்டுமே தனது கவனம் இருக்கும் என்றும் கூறி உள்ளார்.

சமீபகாலமாக அதிமுகவில் நிகழ்ந்து வருல் அரசியல் குழப்பத்தில், சசிகலாவை சந்தித்து ஆதரவு என்றும், டிடிவி தினகரனுக்கு ஆதரவு என்றும் கூறிய கருணாஸ் திடீரென எடப்பாடியை சந்தித்து பேசி அவருக்கு ஆதரவாளர் என்பதுபோல காட்டி அரசியல் செய்து வருகிறார்.

இந்நிலையில், திண்டுக்கல் அருகே உள்ள  மாரம்பாடி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கருணாஸ் எம்எம்ஏ கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில்தான் பிறந்தவன்.  அதன் காரணமாகவே  எனது சமூகத்தை சார்ந்தவர்களுக்கு உதவி செய்யவே ஒரு  ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளேன். ஆனால், எம்எல்ஏவாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா.  என்னை அவர்  திருவாடனை தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்து பெருமை படுத்தினர்.

அந்த தேர்தல் நேரத்தில் எ என்னிடம் ரூ.1500 மட்டுமே இருந்தது. அதனால் என்ன செய்வதென்றே தெரிய வில்லை. ஆனால்,  ஜெயலலிதா எனக்கு நம்பிக்கை ஊட்டினார். நேங்கள் தேர்தலை எதிர்கொள்ளுங்கள்…  கண்டிப்பாக  வெற்றி பெறுவீர்கள் என உறுதி அளித்தார்.

அதன்படி  திருவாடானை தொகுதியில்  வெற்றிபெறவும் வைத்தார். ஆனால், என்னை வேட்பாளராக அறிவிக்க செய்ததற்கு சசிகலாவே காரணம். அதன் காரணமாகவே அவரை சந்தித்து ஆதரவு தந்தேன் என்றார்.

ஆனால், ஜெ.மறைவுக்கு  தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் என்னை பெரிதும் பாதித்து வருகின்றன. தற்போதைய ஆட்சி மீதும், முதல்வர், துணைமுதல்வர் மீதும் மக்கள்  நம்பிக்கை வைத்துள்ளார்களா என்பது தெரியவில்லை என்றார்.

மேலும்,  இனிமேல் நான் எந்த தேர்தலிலும் போட்டியிட விரும்பவில்லை. அது  சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும்,  வேறு எந்த தேர்தலாக இருந்தாலும் அதில்  போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை.

இனிமேல்  சினிமாவில் மட்டுமே முழு கவனம் செலுத்த உள்ளேன் என்ற கருணாஸ்,  தற்போது நான் வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு நியாயமாக நடந்து கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article