சிம்லா

மாசல பிரதேச பாஜக தலைவர் சத்பால் சிங் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்துள்ளது.

 

 

தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதித்து வருகிறது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது யோகி ஆதித்யநாத், “ அலி என்னும் :இஸ்லாமியரும் பஜ்ரங் பலி அதாவது அனுமன் என்னும் மலை வாழ் தலித்தும் பாஜகவுக்கு வாக்கு கிடைக்க உதவுவார்” என பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அதையே மாயாவதி அவர்கள் இருவரும் அதாவது இஸ்லாமியரும் பஜ்ரங் பலி அதாவது அனுமான் என்னும் தலித்தும் தங்கள் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என கூறினார். இவ்வாறு இருவரும் மதம் மற்றும் சாதி குறித்து பேசி வாக்கு சேகரிப்பதாகவும் அதனால் இருவருமே தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதால் இருவருக்கும் பிரசாரம் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

பாஜகவின் ஹிமாசல ப் இரதேச தலைவர் சத்பால் சிங் ஒரு தேர்தல் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையான ஒரு கெட்ட வார்த்தையால் திட்டி உள்ளரர். இந்த வீடியோ பதிவாகி பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சத்யபால் சிங் தகாத வார்த்தைகளால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திட்டியதை அடுத்து அவர் பிரசாரம் செய்ய 48 மணி நேரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு நாளை காலை 10 மணி முதல் அமுலுக்கு வர உள்ளது.