பாரிஸ்

லக பத்திரிகை சுதந்திர வரிசையில் இந்தியா இரு எண்ணிக்கை கீழ்நோக்கி சென்றுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பத்திரிகை சுதந்திரம் குறித்து பாரிஸில் உள்ள எல்லை அற்ற செய்தியாளர்கள் என்னும் ஒரு சுதந்திர அமைப்பு கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இந்த அமைப்பு இத்தகைய கணக்கெடுப்பை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் அப்போதைய நிலைமைக்கு ஏற்ப பத்திரிகை சுதந்திரம் குறித்த அளவு கணக்கிடப்படுகிறது.

இந்த வருடத்துக்கான கணக்கெடுப்பில் மொத்தம் 180 நாடுகள் இந்த வரிசையில் இடம் பெற்றுள்ளன. அதில் முதல் இடத்தில் நார்வே உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நார்வே முதல் இடத்தில் இருந்து வருகிறது. இரண்டாம் இடத்தில் ஃபின்லாந்து உள்ளது. கடந்த ஆண்டு நான்காம் இடத்தில் இருந்த இந்த நாடு இரு இடங்கள் முன்னேறி உள்ளது. சைபர் கிரைம் அதிகரித்துள்ளதால் சென்ற ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த நெதர்லாந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்த வரிசையில்  இந்தியா 140 ஆவது இடத்துக்கு வந்துள்ளது. சென்ற முறையில் இருந்து 2 இடம் கீழிறங்கி உள்ளது. இதற்கு காரணமாக பத்திரிகையாளர்கள் மீதான வன்முறை காரணமாக கூறப்படுகிறது. நேற்று வெளியான இந்த ஆய்வறிக்கையில் கடந்த வருடம்மட்டும் ஆறு இந்திய பத்திரிகையாளர்கள் மீது வன்முறை தாக்குதல் நடந்து அவர்கள் கொல்லபட்டதால் இந்தியா இரு இடங்கள் கீழே இறங்கி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை, நக்சலைட்டுகள், லஞ்ச ஊழல் அரசியல்வாதிகள் ஆகியோரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் நடந்த ஆறு பத்திரிகையாளர்கள் கொலையை தவிர ஏழாம் மரணத்திலும் கொலை இன்னும் சந்தேகம் நீடித்து வருகிறது. இந்த கொலைகளால் மட்டுமின்றி தேர்தல் நேரத்தில் ஆளும்கட்சியினர் (பாஜக) பத்திரிகையாளர்களுக்கு கடும் மிரட்டல் விடுத்துள்ளனர்.