டெல்லி : 146 ஆண்டுகளுக்கு பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடுமையான வெப்பம் இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இதுபோன்ற வெப்பம் 1877ம் ஆண்டு காணப்பட்ட நிலையில், மீண்டும் இந்த வருடம் காண்ப்பட்டது குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வும்  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   சராசரி வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியஸ் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த பிப்ரவரி மாதம் பதிவான வெப்பநிலை 29.54 டிகிரி செல்சியஸாக உள்ளது. இதுவே இதுவரை இருந்த பிப்ரவரி வெப்பநிலையில் அதிகபட்சமாகும்.

1901க்குப் பிறகு 2006 பிப்ரவரியில் 29.31°C, 2016 பிப்ரவரியில் 29.48°C பதிவானதே இதற்குமுன் பதிவான அதிகபட்ச சராசரி வெப்பநிலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெப்பம் மிகுந்ததாக காணப்பட்டது. 1901ம் ஆண்டுக்கு பிறகு இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெப்பம் அதிகமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநிலங்களுக்கு  மத்தியஅரசுறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.