சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2வில் உள்ள, 28 பாடப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மணாவிகளுக்கு செய்முறை தேர்வு இன்று (மார்ச் 1) தொடங்கி உள்ளது. இந்த தேர்வு, வரும் 9ந்தேதிவரை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த  பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 13, 14ம் தேதிகளில் பொதுத் தேர்வு துவங்க உள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதன் முதற்கட்டமாக, பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வு இன்று துவங்கியுள்ளது. வரும், 9ம் தேதி வரை பல்வேறு பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.

10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்சகான தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி பொதுத்தேர்வுகள் மார்ச் 13, 14ம் தேதிகளில் தொடங்க உள்ளன. இந்த தேர்வுகள், மாநிலம் முழுதும், 3,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உட்பட, 5,000 பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில், செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இன்று முதல் தேர்வு நடைபெற்று வருகிறது.

பிராக்டிக்கல் தேர்வையொட்டி, சம்பந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளின் ஆய்வகங்களில், உரிய வகையில் ரசாயன பொருட்களும், ஆய்வக பயன்பாட்டு பொருட்களும் தயாராக வைத்திருக்கும்படி பள்ளிகளுக்கு  அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.